மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கணித அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Scientific Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.56 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய கணித அறிவியல் நிறுவனம் (IMSc)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Scientific Officer
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Physics, Mathematics, Computer Science, IT, Computer Applications பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது Computer Science, ECE, EEE, IT துறைகளில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 28.01.2022 தேதியின்படி 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.56,100 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://imsc.res.in/ எனும் இணையதளத்தின் மூலம் 28.01.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.imsc.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












