மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனையில் (IMPCOPS) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதறக்ன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 72 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணய செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனை (IMPCOPS)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 72
பணி மற்றும் கல்வித் தகுதி:
Assistant, Clerk - 12-வது தேர்ச்சி பெற்று கூட்டுறவுத் துறை சார்ந்த டிப்ளமோ கல்வித் தகுதி பெற்றவர்கள் அல்லது ஏதேனும் துறையில் பட்டம் பெற்று கணினி அறிவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அலுவலக உதவியாளர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Attender Cum Driver - 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Analyst (Chemistry) - வேதியியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Analyst (Microbiology) - மைக்ரோபயாலஜி துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Electrician - 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ எலக்ட்ரீசியன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Fitter - 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ Fitter தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Masseur, Therapist - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று Masseur சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Male Worker - 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Medical Officer மற்றும் Medical Superintendent - சித்தா துறையில் இளநிலைப் பட்டம் அல்லது ஆயுர்வேதம் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Pharmacist (Trainee) - 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று டிப்ளமோ கூட்டுறவுத் துறை பயிற்சி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 35 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.8,000 முதல் ரூ.1,12,400 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 05.04.2021 தேதிக்குள் இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருந்தகம் மற்றும் கடைகள், 34-37 கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை, திருவான்மியூர், சென்னை - 600041 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.impcops.org/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












