இந்திய சுரங்க தொழில்நுட்ப கல்லூரியில் (IITISM) காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 73 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய சுரங்க தொழில்நுட்ப கல்லூரி (IITISM)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Junior Assistant
மொத்த காலிப் பணியிடங்கள் : 73
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அதிவேக தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nfr.iitism.ac.in எனும் இணையத முகவரியின் மூலம் 31.08.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஸ்கிரீன் தேர்வு, துறைத்தேர்வு, முதன்மை தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nfr.iitism.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












