IIT Tirupati Recruitment 2023: ரூ.2.11 லட்சத்தில் திருப்பதி ஐஐடியில் பணி...!

தேசிய தர வரிசையில் தொடர்ந்து இடம் பிடித்து வரும் முன்னணி கல்வி நிறுவனமான திருப்பதி ஐஐடியில், ஆசிரியர் அல்லாத பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ரூ.21,700/- முதல் ரூ.2,11,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

நிர்வாகம் : திருப்பதி ஐஐடி (IIT Tirupati)

மேலாண்மை : மத்திய அரசு

மத்திய கல்வி நிறுவனத்தில் ஆசிரியரல்லாத பணி வாய்ப்பு...!

பணி விவரம் :

துணை நூலகர் Deputy Librarian

துணை பதிவாளர் Deputy Registrar

ஜூனியர் தொழில்நுட்ப கண்காணிப்பாளர் Junior Technical Superintendent

ஜூனியர் கண்காணிப்பாளர் Junior Superintendent

ஜூனியர் உதவியாளர்/ஹிந்தி உதவியாளர் கிரேடு-I Junior Assistant / Junior Hindi Assistant Grade-1

ஜூனியர் தொழில்நுட்ப அலுவலர் Junior Technician

உடற்பயிற்சியாளர் Physical Training Instructor

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.09.2023

கல்வி தகுதி

துணை நூலகர் பணியிடத்திற்கு Library Science / Information Science / Documentation படிப்பில், 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

துணை பதிவாளர் பணியிடத்திற்கு, 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Finance & Accounts/ CA/ICWA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ஜூனியர் உதவியாளர் பணிக்கு எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

ஜூனியர் இந்தி உதவியாளர் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு, பதவிக்கு ஏற்ப Pay Level -12, 6, 3, 5 என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் ரூ.2,11,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

குரூப் ஏ பணிக்கு ஸ்கிரீனிங் டெஸ்ட், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

குரூப் பி & சி பணிக்கு Objective- Based Test, எழுத்துத் தேர்வு, ட்ரேட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

https://iittp.ac.in/recruitment என்ற அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 22.09.2023 ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

பணி அனுபவம்

பதவிக்கு ஏற்றவாறு சம்பந்தப்பட்ட துறையில், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி அனுபவம், கல்வி தகுதி உள்ளிட்ட இன்ன பிற விவரங்கள் குறித்து கூடுதலாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

சந்தேகங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொண்டு அறியலாம்.

https://www.iittp.ac.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://iittp.ac.in/pdfs/recruitment/2023/Detailed advertisement - Staff 02-2023.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIT Tirupati, which is ranked 59th in the national ranking list, has announced that eligible candidates can apply for the vacant non-teaching posts.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+