IIT Madras Recruitment 2022
தேசிய தர வரிசையில் தொடர்ந்து இடம் பிடித்து வரும் முன்னணி கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில்,'Project Officer' பணிக்கு தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ரூ.27,500/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
நிர்வாகம் :சென்னை ஐஐடி (IIT Madras)
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
திட்ட அலுவலர்(Project Officer)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.10.2022
கல்வி தகுதி
திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு, ரூ.27,500/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை
அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 07.10.2022 ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
பணி அனுபவம்
சம்பந்தப்பட்ட துறையில், இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Project Officer பணிக்கு, பல்வேறு காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பணி அனுபவம், கல்வி தகுதி உள்ளிட்ட இன்ன பிற விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












