மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள உதவி கணக்கு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.காம் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : உதவி கணக்கு அதிகாரி
கல்வித் தகுதி : பி.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.25,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணையதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iiitdm.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iiitdm.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












