மத்திய அரசிற்கு உட்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் (IIFT) துறையில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் ரூ.2.20 லட்சம் வரையில் இதற்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் (IIFT)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
கல்வித் தகுதி :
பேராசிரியர் - அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.எச்டி தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகள் Assistant Professor/ Associate Professor/ Professor, and/or research ஆக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உதவிப் பேராசிரியர் - முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். மேலும், NET, SET, SLET இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு 62 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.57,700 முதல் ரூ.2,20,200 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://campus360.iift.ac.in/API_FAC_Reg.asp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.05.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் tedu.iift.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












