இக்னோ பல்கலையில் இளநிலை உதவியாளர் பணி வாய்ப்பு
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கு, குறைந்தபட்சம் பத்தாம் மற்றும் பிளஸ் டூ வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். ஆசிரியர் அல்லாத இந்த காலிப் பணியிடங்களை, தேசிய தேர்வு ஆணையம் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்கனும் என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.
நிர்வாகம் : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம்
மேலாண்மை : மத்திய அரசு
காலிப்பணியிடம் எண்ணிக்கை: 200

பணி விவரம்
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் - (Junior Assistant-cum-Typist (JAT)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.04.2023
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், 10+12 என்ற முறையில் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கம்யூட்டரில், ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 40 வார்த்தைகளும் (W.P.M), ஹிந்தியில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகளும்(W.P.M) விரைவாக டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1000 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடியின / பட்டியிலின பிரிவினர், மகளிர் ஆகியோர், ரூ.600 விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் முறையில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட முறைகள் வாயிலாக தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.
பணியிடம்
நாடு முழுவதும் உள்ள மையங்களில் தேர்வு செய்யப்படும் நபர்கள் பணி அமர்த்தப்படுவர்.
ஊதியம்
நிலை-2இன்படி, பணியில் அமர்த்தப்படும் நபர்கள் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை, ஏழாவது ஊதியக்குழுவின்படி மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை/ நிபந்தனைகள்
Ø எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில், தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Ø எழுத்து தேர்வு பாடத்திட்டம், தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் உள்ளிட்ட விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டு உள்ளன
Ø விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.
Ø காலிப்பணியிடங்கள் குறித்து https://recruitment.nta.nic.in/WebInfoIgnou/Page/Page?PageId=1&LangId=என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Ø விண்ணப்பங்களை 20.04.2023 இரவு 11.:59 மணிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
Ø கூடுதல் தகவலுக்கு https://recruitment.nta.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P என்ற இணைப்பை க்ளிக் செய்து விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு
இ-மெயில் : [email protected]
தொலைபேசி எண் - 011-69227700, 011-40759000
முக்கியங்கோங்க...!
விண்ணப்ப கட்டணம் தொடர்பாக கீழ் வரும் தகவல்களை இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.
வங்கியின் பெயர்
விண்ணப்ப கட்டண பரிவர்த்தனை செய்த நேரம் / தேதி
பரிவர்த்தனை எண்
வங்கி ஃரெபரன்ஸ் எண்
பணபரிவர்த்தனையின் ஸ்கிரீன்சார்ட்
ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2023
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி நாள்: 22.04.2023
ப்ளீஸ் கிளிக் ஆல் டீடைல் யூ வில் கெட்...!
https://recruitment.nta.nic.in/WebInfoIgnou/Page/Page?PageId=1&LangId=
https://recruitment.nta.nic.in/WebInfoIgnou/File/ViewFile?FileId=7&LangId=P
https://recruitment.nta.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P


Click it and Unblock the Notifications












