ஜேஇஇ, நீட் பயிற்சியைப் பெற முடியாதவர்கள் கவலை வேண்டாம். அவர்களின் கவலையைப் போக்குவதற்காக மத்திய அரசு சாத்தி' என்ற இணையதளத்தை கான்பூர் ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தின் உதவியுடன் தொடங்கியுள்ளது. நீட், ஜேஇஇ, மாநில அளவிலான பொறியியல் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராவதற்காக ஐஐடி கான்பூருடன், மத்திய கல்வி அமைச்சகம் கைகோர்த்துள்ளது. ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு வசதியாக பயிற்சியை ஐஐடி கான்பூர் அளிக்கிறது. அவர்கள் எந்தவித கட்டணமும் இன்று இலவசமாக படிக்கலாம்.
நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஏழை மாணவர்களுக்காக சாத்தி (SATHEE) என்ற இணையதளத்தை ஐஐடி கான்பூர் உருவாக்கியுள்ளது. இந்த இணையதளம் மூலம் மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் இலவசமாகக் கிடைக்கும்.

சாத்தி (SATHEE) என்ற இணையதளம் நீட், ஜேஇஇ, பொறியியல் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கான வினா-விடைகளை அளிக்கிறது. இந்த இணையதளத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்துள்ளார். இந்தத் தகவலை அவர் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் தெரிவித்துள்ளார்.
இந்த இணையதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கருவிகள் (chatbots) பயனுள்ள தேர்வு தயாரிப்பு உத்திகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற தேர்வுகளில் மாணவர்களுக்கு உதவ இந்த இணையதளம் பல வசதிகளை வழங்குகிறது. போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மூத்த மாணவர் மாதிரி தேர்வுத் வினாத்தாள்களை விடையளிப்பது மற்றும் கேமராவில் வெவ்வேறு கேள்விகளுக்கான பதில்களை வழங்கி, விளக்குவது ஒரு சிறப்பு அம்சமாகும்.
ஏழை மாணவர்கள் இந்த இணையதளத்தில் நேரலை மூலம் பாடங்களைப் பெறலாம்.
இதன்மூலம் வினாத்தாளில் உள்ள ஒரு வினாவுக்கு விடையை எவ்வாறு அளிப்பது என்பது தொடர்பான விளக்கங்களும் கிடைக்கின்றன.
மேலும் இந்த இணையதளத்தில் 60,000 க்கும் மேற்பட்ட கேள்விகள், அதற்கான விடைகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு கேள்விகளுக்கு விடையளித்து தங்களைத் தாங்களே மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
இந்த கேள்விகள் பல்வேறு பாடப் புத்தகங்கள், என்சிஇஆர்டி பாடப் புத்தகங்கள், வினா-விடை வங்கிகள், முந்தைத் தேர்வுகளில் அளிக்கப்பட்ட வினாத்தாள்கள், கல்வி நிபுணர்கள் தயாரித்த வினாத்தாள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டவையாகும். தற்போதுள்ள நீட், ஜேஇஇ தேர்வு முறை, பாடத்திட்டம் ஆகியவற்றைப் பின்பற்றி இவை எழுதப்பட்டுள்ளன.
மேலும் சாத்தி (SATHEE) இணையதளம், வீடியோ மூலம் பேராசிரியர்கள் நடத்தும் பாடங்களையும் வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் இணையதளத்தில் நேரடியாக விவாத நிகழ்ச்சியும் இருக்கும்.
இந்த அம்சம் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதைத் தவிர வாரியத் தேர்வுகளுக்கான என்சிஇஆர்டி(NCERT) பாடத்திட்டத்தைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு விரிவான மற்றும் ஊடாடும் கற்றல் தளத்தை வழங்குகிறது என்பது முக்கிய அம்சமாகும்.
இந்த விரிவுரைகள் மற்றும் அமர்வுகள் ஐஐடிக்கள், எய்ம்ஸ்(IIT, AIIMS) மற்றும் பிற முதன்மையான நிறுவனங்களில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த மாணவர்களால் வழங்கப்படுகின்றன.
இந்த இணையதளம் ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. நீட், ஜேஇஇ தேர்வுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து பயிற்சியைப் பெற முடியாதவர்கள், இந்த இணையதளத்தை இலவசமாக அணுகுவதன் மூலம் பெற முடியும். எனவே ஏழை மாணவர்கள் ஜேஇஇ, நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை என்பது திண்ணம்.
கூடுதல் விவரங்களுக்கு https://sathee.prutor.ai/ என்ற இணையதள முகவரியை அணுகலாம்.


Click it and Unblock the Notifications












