மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசியின் அங்கமாக செயல்பட்டு வரும் ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள Assistant Manager Grade 'A' பணிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 650 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஐடிபிஐ வங்கி (IDBI Bank)
மொத்த காலிப் பணியிடங்கள் : 650
பணி : Assistant Manager Grade 'A'
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளில்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.36,000. 36000-1490 (7) - 46430 - 1740 (2) - 49910 - 1990 (7) - 63840 (17)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.08.2021 அன்று முதல் 22.08.2021 தேதிக்குள் கீழே உள்ள இணையதள முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000
- எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் தேதி : ஆன்லைன் தேர்வு 04.09.2021 அன்று நடைபெறும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.idbibank.in என்னும் வங்கி இணையதளம் அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












