இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 600 பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன. பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம் : ஐடிபிஐ வங்கி
மொத்த காலிப் பணியிடங்கள் : 600
பணி : உதவி மேலாளர் (கிரேடு ஏ)
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் தறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 01.06.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.23,700 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : www.idbi.com என்னும் இணையதள பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம் :
- எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150.
- மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.200 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 03.07.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisment-MGES-2019-20.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












