பொதுத்துறை வங்கிகளில் இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 120 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.58 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஐடிபிஐ
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :
சிறப்பு அதிகாரி : 120
கல்வித் தகுதி :
ஏதேனும் ஓர் தறையில் பட்டப்படிப்பையோ அல்லது பொறியியல் துறையில் பி.இ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.31,705 முதல் ரூ.58,400 வரையில்
வயது வரம்பு : 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.700
- எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.150
விண்ணப்பிக்கும் முறை : www.idbi.com என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.04.2019
தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய நாள் : 30.04.2019
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யக் கடைசி தேதி : 15.05.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.idbi.com/pdf/careers/DetailedAdvertisement-Specialists2019-Mar2019-.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












