இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ICMR) காலியாக உள்ள Scientist D பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.10 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Scientist D
காலிப் பணியிடங்கள் : 04
கல்வித் தகுதி :
இந்திய பல் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பிடிஎஸ் மற்றும் எம்டிஎஸ் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், அரசுத் துறையில் R&D/ teaching துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.78,800 முதல் ரூ.2,09,300 வரையில் ஊதியமாக வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.05.2021 தேதிக்குள் https://recruit.icmr.org.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,500
- எஸ்.சி, எஸ்.டி, பெண், பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruit.icmr.org.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












