12-வது தேர்ச்சியா? சென்னையிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE) நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Assistant மற்றும் Multi-Tasking Staff பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
12-வது தேர்ச்சியா? சென்னையிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE)

பணி : Technical Assistant மற்றும் Multi-Tasking Staff

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :-

Technical Assistant :

மைக்ரோ பயோலாஜி அல்லது மெடிக்கல் லேப் பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருகக வேண்டும்.

மேலும், மைக்ரோ பயோலாஜி அல்லது மெடிக்கல் லேப் பிரிவில் முதுகலை முடித்திருக்க வேண்டும்.

அதோடு, மைக்ரோ பயோலாஜி துறையில் மூன்று வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Multi-Tasking Staff :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ஊதியம் : ரூ.15,800 முதல் ரூ.31,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 27.07.2021

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

ICMR-NIE: National Institute of Epidemiology,
R-127,
Second Main Road,
TNHB Ayapakkam,
Chennai-600077.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nie.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR NIE Chennai Recruitment 2021: Technical Assistant and Multi-Tasking Staff post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X