இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில்(ஐசிஎம்ஆர்) கன்சல்டன்ட் (Consultant (Regulatory) (Non-Medical) பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு
https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/advertisement12122023.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research - ICMR) என்பது உயிரியல் மருத்துவ ஆய்வுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான உச்சபட்ச அதிகாரம் கொண்ட இந்திய நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள பழமையான மற்றும் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சிக் குழுக்களில் ஒன்றாகும். இந்த சபைக்கு தேவையான நிதியை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வழங்குகிறது.

1911 ஆம் ஆண்டில், இந்திய அரசால் இந்திய ஆராய்ச்சி நிதி சங்கம் (ஐஆர்ஏஏ) என்ற அமைப்பு நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியினை ஒருங்கிணைப்பதற்கான குறிப்பிட்ட நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 1949 ஆம் ஆண்டில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையாக (ஐ.சி.எம்.ஆர்) மாற்றியமைக்கப்பட்டது.
சபையின் நிர்வாகக் குழு மத்திய சுகாதார அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சபையில் உயிர் மருத்துவத் துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள் உள்ளனர். எனவே தேவையானபோது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களில் உதவுகிறது. இந்தச் சபையின் வழிகாட்டுதலில் கீழ்க்கண்ட குழுக்கள் போன்றவை உள்ளன:
இந்த பெருமைமிகு ஐசிஎம்ஆர் இன்ஸ்டிடியூட்டில் தான் தற்போது கன்சல்டன்ட் பணியிடங்கள் (Consultant (Regulatory) (Non-Medical) காலியாக உள்ளன.
வயது வரம்பு
இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 70 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
கல்வி தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் இருந்து பிஎச்.டி அல்லது எம்டி (PhD or MD ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இந்த கன்சல்டன்ட் பணியிடத்துக்கு (Consultant) தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,00,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு செயல் முறை
இந்தப் பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கன்சல்டன்ட் (Consultant) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இணைக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் சமீபத்திய விவரங்களுடன் 04.01.2024 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/advertisement12122023.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












