இக்மாய் (ICMAI) என்று அழைக்கப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா (Institute of Cost Accountants of India) நிறுவனத்தில் காலியாக உள்ள செக்கரட்டரி, கூடுதல் செக்கரட்டரி, இயக்குநர், துணை இயக்குநர் (Secretary, Additional Secretary, Director, Deputy Director) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்-லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய https://eicmai.in/Recruitment_051223_6fhte55/login.aspx என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர்கள் நிறுவனம் என்று அழைக்கப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா (Institute of Cost and Works Accountants of India- ICWAI) என்பது ஒரு இந்திய தொழில்முறை கூட்டமைப்பாகும். பொருட்களின் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தவும் கிடைத்தற்கரிய வளங்கள், மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் மத்திய அரசு, உற்பத்திச் செலவுத் தணிக்கையை அறிமுகப்படுத்தியது.
நிதித் துறை தணிக்கையாளர்களைப் போலவே உற்பத்திச் செலவுத் தணிக்கையாளர்களை உருவாக்குவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புச் சட்டம் ஒன்றின் மூலம் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் நடத்தும் மூன்றடுக்குத் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று செயல் முறைப் பயிற்சியையும் முடிப்பவர்கள், இந்நிறுவனத்தில் உறுப்பினராவதுடன் உற்பத்திச் செலவுத் தனிக்கையாளராகவும் சேவை புரிய முடியும்.

முதல் அடுக்குத் தேர்வை பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இத்தேர்வினை எழுதலாம். இதற்காக இந்நிறுவனத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்நிலையில் நான்கு தாள்கள் (பொருளாதாரம், கணக்குப் பதிவியல், கணிதம் மற்றும் நிறுவன அமைப்பு மற்றும் மேலாண்மை) உள்ளன .
இரண்டாம் அடுக்குத் தேர்வில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு தாள்கள் வீதம் மொத்தம் எட்டு தேர்வுகள் எழுத வேண்டும். இடை நிலை (இண்டர்மீடியட்டு) முடித்தபின் 1 ஆண்டு பயிற்சி பெற வேண்டும்.
மூன்றாவது அடுக்குத் தேர்வில் இடை நிலை போலவே இதிலும் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு தாள்கள் உள்ளன. எட்டு தாள்களிலும் வெற்றி பெற்று ஈராண்டு நடைமுறைப் பயிற்சியையும் முடித்தால் இந்நிறுவனத்தில் உறுப்பினராகப் பதிவு பெறலாம்.
இந்த பெருமை வாய்ந்த இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா (Institute of Cost Accountants of India) நிறுவனத்தில்தான் தற்போது செக்கரட்டரி, கூடுதல் செக்கரட்டரி, இயக்குநர், துணை இயக்குநர் (Secretary, Additional Secretary, Director, Deputy Director) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.
இக்மாய் (ICMAI) பணிகளுக்கான கல்வி:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டமேல்படிப்பு, சிஏ, எல்எல்பி, எம்பிஏ, பிஎச்.டி. (Master Degree, CA, LLB, MBA, Ph.D) பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மேலும், ஐசிஏஐ, ஐசிஎஸ்ஐ, ஐசிஏ (ICAI, ICSI, ICA) ஆகிய இன்ஸ்டிடியூட்களில் உறுப்பினராக (Member) இருப்பது அவசியமானது ஆகும்.
இக்மாய் (ICMAI) பணிகளுக்கான அனுபவத்தகுதி:
இந்த இக்மாய் (ICMAI) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இக்மாய் (ICMAI) பணிகளுக்கான வயதுத்தகுதி:
துணை இயக்குநர் (Deputy Director) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 33 வயதுக்குள் உள்ளவராகவும், மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதுக்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
இக்மாய் (ICMAI) பணிகளுக்கான மாத ஊதியம்:
இந்த பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.78,000/- முதல் ரூ.2,50,000/- வரை மாத ஊதியமாக பெறுவர்.
தேர்வு செய்யும் முறை:
இக்மாய் (ICMAI) பணிகளுக்கு தகுதியான நபர்கள் குழு விவாதம், நேர்முகத் தேர்வு (Group Discussion, Personal Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 5.1.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.
ஆன்-லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய https://eicmai.in/Recruitment_051223_6fhte55/login.aspx என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
பணியிடம் தொடர்பான அறிவிப்புகளைக் காண கீழ்வரும் இணையதள லிங்குகளை கிளிக் செய்து அறியலாம்.
https://eicmai.in/Recruitment_051223_6fhte55/index.aspx
https://eicmai.in/Recruitment_051223_6fhte55/docs/Annexure-I-New.pdf


Click it and Unblock the Notifications












