இந்திய கடலோர காவல்படையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்கள் பெற joinindiancoastguard.cdac.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.
இந்த சிறப்புவாய்ந்த இந்திய கடலோர காவல்படையில்தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
இங்கு தற்போது அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவியில் ஜெனரல் டியூட்டி 50, டெக்னிக்கல் (மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ்) பிரிவில் 20 என மொத்தம் 70 இடங்கள் காலியாக உள்ளன.

இந்திய கடலோர காவல்படை பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: ஜெனரல் டியூட்டி பணிக்கு டிகிரி, டெக்னிக்கல் பணிக்கு தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
இந்திய கடலோர காவல்படை பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 1.7.2024 அடிப்படையில் 21 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை முறையில் ஆட்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய ரூ. 300 விண்ணப்பக்கட்டணமாக செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் 6.3.2024-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்கள் பெற joinindiancoas tguard.cdac.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.


Click it and Unblock the Notifications












