மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) காலியாக உள்ள Deputy Director General பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Deputy Director General
மொத்த காலிப் பணியிடங்கள் : 18
கல்வித் தகுதி :
- Basic Sciences, Agriculture மற்றும் Allied Sciences, Forestry மற்றும் Allied Science ஆகிய பாடங்களில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், Indian Forest Service பணிகளில் 26 ஆண்டுகள் வரையில் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 20.10.2021 தேதியின்படி 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.67,000 முதல் அதிகபட்சம் ரூ.79,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Secretary, Indian Council Of Forestry Research and Education, P.O. New Forest, Dehradun
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு இன்றி Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.icfre.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












