இந்தியா முழுவதும் உள்ள கிராம வங்கிகளில் உள்ள குரூப் ஏ அதிகாரி மற்றும் குரூப் பி அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு வாரியம் : ஐபிபிஎஸ்
பணி மற்றும் தகுதி விவரங்கள் :-
பணி : அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) - 3688
கல்வித் தகுதி :
ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் திறன் : பணிபுரிய விரும்பும் வங்கி அமைந்துள்ள மாநிலத்தின் அலுவலக மொழியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.06.2019 தேதியின்படி 18 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணி : Officer Scale I - 3381
பணி : Officer Scale II (Agriculture Officer) - 106
பணி: Officer Scale II (General Banking Officer) - 693
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics and Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. கணினி குறித்து திறன் பெற்றிருக்க வேண்டும். வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது வரம்பு : 01.06.2019 தேதியின்படி 18 முதல் 30, 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். (பணிகளுக்கு ஏற்ப மாறுபடும்.)
பணி : Officer Scale II (Marketing Officer) - 45
பணி : Officer Scale II (Treasury Manager) - 11
பணி : Officer Scale II (Law) - 19
பணி : Officer Scale II (CA) - 24
பணி : Officer Scale II (IT) - 76
கல்வித் தகுதி : 50 சதவிகித மதிப்பெண்களுடன் மின்சாரவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் போன்ற ஏதேனும் ஓர் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது சிஏ அல்லது எம்பிஏ (சந்தையியல், நிதி) முடித்திருக்க வேண்டும். அல்லது சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது விவசாயம், கால்நடை அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.06.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணி : Officer Scale III - 157
கல்வித் தகுதி :
குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Co-operation, Information Technology, Management, Law, Economics and Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது வரம்பு : 01.06.2019 தேதியின்படி 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்காக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் ஐபிபிஎஸ் மூலம் முதல்நிலை தேர்வு, முதன்மை ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். பின்னர் தேவையான பயிற்சிக்குப் பின் நிரந்தரப் பணி வழங்கப்படும்.
நேர்முகத்தேர்வின்போது தேவையான சான்றுகளின் அசல் சான்றிதழ்கள் மற்றும் சுய கையொப்பமிடப்பட்ட நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட், கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.600
- தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
- அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100
இதனை கிரெடிட், டெபிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனில் மட்டும் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவுடன் கணினியில் வழங்கப்படும் e-recepit-ஐ பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.ibps.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு பற்றிய விவரங்கள் கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். தகவல் பெற்றவுடன் ஐபிபிஎஸ் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான இடத்தில் புகைப்படம் ஒட்டி எழுத்துத் தேர்வுக்கு கொண்டு வரவேண்டும்.
இதுகுறித்தான மேலும் விபரங்களை அறிய www.ibps.in அல்லது https://www.ibps.in/wp-content/uploads/CRP_RRB_VIII_ADVT_15_06_2019.pdf என்ற இணைப்பில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைன் தேர்வுக்கு உரிய அழைப்புக் கடிதத்தினை ஜூலை 2019 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசித் தேதி : 04.07.2019


Click it and Unblock the Notifications












