பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7855 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்
தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Clerk
மொத்த காலிப் பணியிடங்கள் : 7855
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட வங்கிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ibpsonline.ibps.in/crpcl11jun21/ என்ற இணையதளம் மூலம் 27.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Prelims மற்றும் Mains எனும் இரண்டு கட்ட தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.850
- எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ibps.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












