இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் வங்கியில் காலியாக உள்ள 7,275 கிளார்க் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயணடையலாம்.

கிளார்க் பணிகளுக்கான 7-வது எழுத்து தேர்வை (சி.டபுள்யூ.இ.-8) ஐபிபிஎஸ் அறிவித்து உள்ளது. மொத்தம் 7,275 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 792 இடங்கள் உள்ளன.
வேலை : மத்திய அரசு வேலை
வயது வரம்பு : 01.09.2018-ம் தேதியன்று 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
கல்வித்தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்பு
கூடுதல் திறன் : கணினி திறன் அவசியம்
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600
எஸ்.சி./எஸ்.டி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: ஐ.பீ.பி.எஸ். இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: செப்டம்பர் 18, 2018
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அக்டோபர் 10, 2018
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள் : டிசம்பர், 8, 9, 15, 16.
முதன்மைத் தேர்வு : ஜனவரி 2019
மேலும் விரிவான விவரங்களை https://www.ibps.in/ மற்றும் https://ibpsonline.ibps.in/crpclk8sep18/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications












