மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள Young Professional பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு எம்.எஸ்சி துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஜூன் 21ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Young Professional
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி : M.Sc Agriculture, M.Sc Life Science துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.25,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iari.res.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 21.06.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iari.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












