சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (எச்.வி.எப்.,) 'அப்ரென்டிஸ்' பணிக்கு இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதிவாய்ந்த நபர்கள் இதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம்.
சென்னை ஆவடியில் அமைந்துள்ள கனரக வாகனத் தொழிற்சாலை. ராணுவத்துக்குத் தேவையான கவச வாகனங்கள் உள்ளிட்டவற்றை எச்விஎப் தொழிற்சாலை தயாரித்து வழங்குகிறது. ராணுவம், கடற்படை, விமானப் படைக்குத் தேவையான கனரக போர்க்கள ஊர்திகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தின்படி 1965-ம் ஆண்டு இந்தத் தொழிற்சாலையை மத்திய அரசு நிறுவியது.
இங்கு விஜயந்தா, டி-90 மற்றும் டி-72 ரக பீரங்கி, கவச வாகனங்களையும் போர்க்கள பெருஞ்சுமை ஊர்திகளையும் தயாரிக்கிறது எச்விஎப். இங்கு வடிவமைக்கப்பட்ட அர்ஜுன் முதன்மை போர்க்கள பீரங்கி வண்டி பல சிறப்பம்சங்களையும் பாராட்டுக்களையும் குவித்தது ஆகும்.

இந்த தொழிற்சாலை வளாகத்தில்தான் பீரங்கி வண்டிகளின் வடிவமைப்பு மற்றும் வசதிகளை ஆராயும் "நடுவண் ஊர்தி ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு" (CVRDE) அமைந்துள்ளது.
இந்த பெருமைமிகு ஆவடி எச்விஎப் தொழிற்சாலையில் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், சிவில், ஆட்டோமொபைல் பிரிவில் கிராஜூவேட் பதவியில் 110, டெக்னீசியன் பதவியில் 110, கலை, அறிவியல் பிரிவில் 100 என மொத்தம் 320 இடங்கள் காலியாக உள்ளன. அபரென்டிஸ் பயிற்சியில் சேரும் மாணவர்கள் நல்ல தொழிற்பயிற்சியைப் பெறுவதோடு உதவித்தொகையும் கிடைக்கும்.
இந்த அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு கிராஜூவேட் பிரிவுக்கு பி.இ., / பி.டெக். பட்டப்படிப்பும், டெக்னீசியன் பிரிவுக்கு டிப்ளமோ படிப்பும், மற்ற பிரிவுக்கு பட்டப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
இந்த அப்ரென்டிஸ் பணியிடங்களில் சேரும் நபர்களுக்கு ஸ்டைபண்டு (உதவித்தொகை) வழங்கப்படும். கிராஜூவேட் பிரிவுக்கு ரூ. 9,000 மும். டெக்னீசியன் பிரிவுக்கு ரூ. 8,000 மும் ஸ்டைபண்டாக வழங்கப்படும்.
இதன் பயிற்சிக்காலம் ஓராண்டு ஆகும். கல்வித்தகுதி, மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் ஆட்கள் இதற்குத் தேர்வு செய்யப்படுவர்.
இந்த அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப 16.12.2023 கடைசி நாளாகும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு boat-srp.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












