மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதறற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 200 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.60 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL)
மொத்த காலிப் பணியிடங்கள் : 200
பணி : பொறியாளர்
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.hindustanpetroleum.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் கணினி வழியிலான தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர் ரூ.1,180 கட்டணம் செலுத்த வேண்டும்.
- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.hindustanpetroleum.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












