Latest Private Jobs in Tamilnadu:தனியார் துறை வேலைவாய்ப்பை தேட புதிய வசதி...!

தனியார் துறை வேலைவாய்ப்புகள் 2022

ரூ.10 ஆயிரம் முதல் ஒரு லட்சத்துக்கு மேல் ஊதியம் வழங்கும் தனியார் நிறுவனங்களில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் என, அறிய துறை ரீதியாக நிறுவனங்களை தேட கஷ்டப்பட வேண்டியதில்லை யூத்ஸ்...! அந்த பணியை, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை உங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது என்றால் நம்ப முடியவில்லை?

நம்பி தான் ஆகனும்...! வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும், ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யவும் எளிதாக, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, 'தமிழ்நாடு அரசின் தனியார்துறை வேலை இணையதளம்' (Tamil Nadu Private Job Portal) என்ற இணையதளத்தை தொடங்கியது.4 ஆயிரம் நிறுவனங்கள்

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்...!

தனியார் துறை வேலை இணையதளத்தில், இதுவரை 4,814 தொழிற்நிறுவனங்கள் வேலையளிப்பவராக பதிவு செய்துள்ளனர்.

இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை தேடுபவர்களாகவும் பதிவு செய்துள்ளனர்.ஒரு லட்சத்துக்கு மேல்

அண்மையில் வெளியான புள்ளிவிவரங்கள்படி, சுமார் 42 தொழிற் பிரிவுகளின் கீழ், 1,01,703 காலியிடங்கள் உள்ளன.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், இந்த இணையதளத்தின் கீழ் பதிவு செய்து, பயன் பெறலாம்.உங்க சாய்ஸ்

ஊதியம், இதர தேவைகள், வேலை செய்யும் இடம், நேரம் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களின்படி, வேலைவாய்ப்பை தேடும் வசதியை முற்றிலும் இலவசமாக கிடைக்கப்பெறுகிறது.வாய்ப்பு தரனும்? அதுவும் முடியும்

நீங்கள் வேலை அளிப்பவராக இருந்தால், இந்த இணைய தளத்தில் பதிவு செய்து, உங்கள் நிறுவனத்துக்கு ஏற்ற தகுதியான மனித வளத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

பதிவு முறை தெரிய வேண்டும்?

www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையப் பக்கத்திற்கு செல்லவும்.முகப்புப் பக்கத்தில், வேலைதேடுபவர் என்பதை தேர்வு செய்து உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.

அதில், புதிய கணக்கை உருவாக்குக என்பதன் கீழ், பெயர், தந்தையின் பெயர், மின்னஞ்சல், கைபேசி எண், ஆதார் எண், கடவுச்சொல் ஆகிய விவரங்கள் உள்ளிட வேண்டும்.

உங்கள் கைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு வெற்றிகரமாக உள்நுழைக.

அடுத்து சுயவிவரப் பதிவு பக்கத்தில், உங்களைப் பற்றிய தனிப்பட்ட விபரங்கள், வீட்டு முகவரி, முன் அனுபவம், கல்வித் தகுதி, மொழி அறிவு, சான்றிதழ், தொழிற்பிரிவுகள், உங்கள் தேவைக்கு ஏற்ற வேலைவாய்ப்பு தொடர்பான முழு விவரங்களை உள்ளீடுக.

இறுதியாக, மின்னஞ்சல்/கைபேசி எண் மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி, உங்கள் தனிப்பட்ட பக்கத்திற்கு செல்லவும்.

அதில், பல்வேறு வேலையளிப்பவர்கள் பதிவிட்டுள்ள காலிப்பணியிட அறிவிப்புகளை (Job Search) ஆராய்ந்து, உங்கள் திறனுக்கும், தேவைக்கும் ஏற்ற வேலைவாய்ப்புகளை தேர்வு செய்யவும்.

உங்களுக்கு ஏற்ற பணியிடங்களை அறிந்து கொண்ட பின், சுயவிவரக்குறிப்பினை உகந்த வேலையளிப்போருக்கு அனுப்பி, 'வாக் இன்' ரெடியாகுங்கள்.

மேலும், தமிழ்நாடு அரசு நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (Job Fair) தொடர்பான அறிவிப்புகளைப் பெற்று, அதில் கலந்து கொண்டும் வேலைவாய்ப்புகளை பெறலாம்.

கை காசு கொடுத்து, போலி, காசுக்காக ஏமாற்றும் நிறுவனத்தில் பணி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் தனியார் கன்சல்டன்சியை அணுகி, ஏமாறுவதை விட, உங்களுக்கான நிறுவனங்களை நீங்களே தேர்வு செய்யும் இலவச வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் யூத்ஸ்...! இலவசமாக தரும் எதையும் நாம் அலட்சியப்படுத்தி தான் பழக்கப்பட்டு இருக்கிறோம்.

அதுபோன்ற அணுகுமுறையை தவிர்த்து, சின்சியராக செய்யுங்க... அரசு நிறுவனத்தை விட, அதிக ஊதியத்தில் பணி வாய்ப்பை பெறலாம்.. ஆல் தி பெஸ்ட்...!

மிஸ் பண்ணிடாதீங்க...

கூடுதல் விவரங்களை அறிய https://www.tnprivatejobs.tn.gov.in/Home/index என்ற இணையதளத்துக்கு ஒரு முறைதான் சென்று பாருங்களேன்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
While public sector companies are also privatizing certain tasks, private companies are each competing and casting a net for qualified people. Not only in the government sector.... Tamil Nadu Government Employment and Training Department has established a simple system to know the information about the sectoral job opportunities in private companies. Interested to know information about it
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+