ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற வரலாற்று பாடங்களின் பங்கு அறிவோம்

ஐஏஎஸ் தேர்வினை வெல்ல வரலாற்று பாடத்தின் பங்கு மற்றும் புத்தக விவரங்கள் தெரிந்து கொள்வோம்.

By Sobana

ஐஏஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 6, 2018 இறுதி தேதி ஆகும். மும்முரமாக படித்து கொண்டு இருக்கும் அனைவரும் ஏற்கனவே விண்ணப்பித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். விண்ணப்பிக்க மறந்தவர்கள் அல்லது மற்ற வேலை காரணமாக விண்ணப்பிக்க காலதாமதம் அடைந்தவர்கள் ஆகியோர் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  ஐஏஎஸ் தேர்வில் வரலாற்று பாடங்களை கொண்டு அதிக மதிபெண்கள் பெறுவது அறிவோம்

ஐஏஎஸ் தேர்வில் முதண்மை தேர்வில் வெற்றி பெற பொது அறிவு பகுதியில் இந்திய வரலாறு குறித்து தெரிந்து கொள்வோம்.
இந்திய வரலாறு பாடத்தின் முக்கியத்துவம் குறித்து ஐஏஎஸ் தேர்வில் நிறைய பேருக்கு தெரிவதில்லை மற்றும் பலருக்கு வரலாறு பாடம் என்றாலே ஒரு கசப்பு உணர்வு அல்லது கடினமானது எனவும் இதனை எவ்வாறு படிப்பது என்ற குழப்பம் இருக்கும். ஆனால் ஐஏஎஸ் தேர்வில் முதன்நிலை தேர்வு மற்றும் முக்கியத் தேர்வில் வரலாற்று பாடத்தின் பங்கு மிக அவசியமாகும் அதனை முழுமையாக உணர்ந்து படித்தால் வெற்றி நிச்சயம் பெறலாம்.

முதண்மை தேர்வில் 15 கேள்விகள் வரை யூபிஎஸ்சி முதன்மை தேர்வில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

வரலாற்று பாடம்:

வரலாற்று பாடம்:

வரலாற்றுப் பாடத்தினை வெல்ல சிபிஎஸ்சி பாடப்புத்தகங்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள வரலாற்று பாடங்களை படிக்க வேண்டும். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள சிபிஎஸ்சி பாடப்புத்தகங்களின் இந்திய வரலாற்றினை ஆரம்ப கால இந்தியா மற்றும் இடைக்கால இந்தியா, எதிர்கால இந்தியா என பிரிவுகளாக பாடங்கள் கொடுக்கப்படும் அதனை முடித்தப்பின் வரலாற்று பாடம் குறித்த ஒரு ஐடியாவானது கிடைக்கும்.

ஆரம்பகால இந்தியா:

ஆரம்பகால இந்தியா:

இந்திய வரலாறானது ஆரம்ப கால இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன கால இந்தியா என மூன்று பிரிவாகவும், உலக வரலாற்றினையும் பிரிவாக படிக்க வேண்டும். போட்டி தேர்வில் வெற்றி பெற வரலாற்றின் பங்கு மிக அவசியம் ஆகும்.

இந்திய வரலாற்றில் ஆரம்ப கால இந்தியா சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் வேதகாலம், மகாஜனபதங்கள், மகத பேரரசு மற்றும் பௌத்தம், ஜெய்னிசம், கிரேக்க படையெடுப்பு, அசோகர், கனிஷ்கர், ஹர்சர், புத்த மாநாடுகள் போன்ற பாடங்கள் கொண்டது ஆரம்ப கால இந்திய வரலாறு அதனை முழுமையாக படிக்க வேண்டும். அலெக்சாண்டர் படையெடுப்பு குறித்து ஆரம்ப கால இந்தியாவில் முழுமையாக படித்தால் கேள்விகளுக்கு எளிதாக விடை கொடுக்கலாம். 

ஆரம்ப கால இந்தியாவில் காந்தாரக்கலைகளின் உருவாக்கம் குறித்தும் அதன் செழுமை குறித்து படிக்க வேண்டும்

ஆரம்பகால இந்திய வராலாற்றின் குறிப்புகள், பாடங்களிலுள்ள முக்கியதுவம் அனைத்தையும் முழுமையாக படிக்க வேண்டும்.

 

இடைக்கால இந்தியா:

இடைக்கால இந்தியா:

இந்திய வரலாற்றில் இடைக்கால இந்தியாவில் அரேபியர்கள் வருகை டெல்லி சுல்தான் ஆட்சி, அடிமைகள் வம்சம், துக்ளக் வம்சம், ரசியா சுல்தானா பேகம் என்ற ஒரு பெண் அரசியின் ஆட்சி, செர்ஷா சூரி ஆட்சி, முகலாயர்களின் ஆட்சியில் பாபர், ஹூமாயூன், அக்பர், ஷாஜகான், ஔரங்கசீப் போன்ற ஆட்சியாளர்களின் ஆதிக்கம் அவர்களின் திட்டங்கள், ஆட்சி விதம், முக்கிய கலைகள், நாணயங்கள் குறித்து வரலாறு கொண்டது இடைக்கால இந்திய வரலாறு.

 

இடைக்கால அரசுகள்:

இடைக்கால அரசுகள்:

ராஜபுத்திரர்கள், ராஷ்டிர கூடர்கள், சாளுக்கியர்கள், காக்கத்தியர்கள், சோழ ராஜ்ஜியம், விஜய நகரம் போன்ற ராஜ்ஜியங்களின் அரசாட்சி அவர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம், சிற்றரசுகள் இடைக்கால இந்தியாவில் இருந்த  சிற்றரசுகள் அவர்களின் ஆட்சி, கலை, திட்டங்கள் முக்கியமானது ஆகும். 

 நவீன கால இந்தியா:

நவீன கால இந்தியா:

இந்தியாவின் ஐரோப்பியர்களின் வருகை, சுதந்திர தொடக்க காலம், பிரிட்டிஷ் ஆட்சி காலங்கள் சட்டங்கள், புதிய கவர்னர்கள், வைசிராய் போன்றோரின் நிர்வாகம். இந்திய தேசிய தோற்றம், காங்கிரஸ் உருவாக்கம் மாநாடுகள், லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர், அரவிந்த் கோஷ், மிதவாதிகள், தீவிரவாதிகள், காந்தி வருகை, காந்தியின் சாத்வீகம், ஒத்துழையாமை இயக்கம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, தணடி யாத்திரை, வேவல் வருகை, ஆகஸ்ட் திட்டம், வடட் மேஜை மாநாடுகள் மற்றும் இந்திய அரசு சட்டங்கள், மறுமலர்ச்சி இயக்கம், சமூக சமய சீர்த்திருத்தங்கள் படிக்க வேண்டும்.

முக்கிய நபர்கள்:

முக்கிய நபர்கள்:

சுபாஷ் சந்திர போஸ், பாரதியார், பகத்சிங், திலகர், அன்னி பெசண்ட், ராஜாராம் மோகன்ராய் போன்ற முக்கிய நபர்கள், நிகழ்வுகள் குறித்து முழுமையாக படியுங்கள்.  முக்கிய நபர்கள் அவர்களின் சீர்திருத்தங்கள், எழுச்சி போராட்டம் அனைத்தையும் தெரிந்து கொண்டால் தான் அதையொட்டிய கேள்விகளுக்கு எளிதாக விடை கொடுக்க முடியும். 

வரலாற்று புத்தகங்கள்:

வரலாற்று புத்தகங்கள்:

சிபிஎஸ்சி புத்தகங்கள் அடிப்படையான தகவல்களை முழுமையாக முடித்தப்பின் , இக்னோ குறிப்புகள் மற்றும் யூபிஎஸ்சிக்கான புத்தகங்கங்களான ஸ்பெக்டரம், டாடா மெக்ராகல் போன்ற புத்தகங்களின் அடிப்படை தகவல்கள் படிக்கும் பொழுது யூபிஎஸ்சி குறித்து கேள்விகளை எளிதாக எழுத முடியும். சந்தையில் விற்கும் வரலாறு வினாவங்கி புத்தகங்கள் பார்த்து படிக்கும் பொழுது யூபிஎஸ்சி தேர்வில் வரலாற்று பாடத்தின் பங்கு பற்றிய ஒரு யுக்தி தெரியவரும்.

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
the article tells about tips for IAS exam
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+