ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள டிசைனர், கண்காணிப்பாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 50-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் (Hindustan Shipyard Ltd)
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : விசாகப்பட்டினம்
மொத்த காலிப் பணியிடம் : 51
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- டிசைனர் (மெக்கானிக்கல்) - 10,
- டிசைனர் (எலெக்ட்ரிக்கல்) - 3,
- ஜூனியர் சூப்பிரவைசர் (மெக்கானிக்கல்) - 7,
- ஜூனியர் சூப்ரவைசர் (எலெக்ட்ரிக்கல்) - 9,
- ஜூனியர் சூப்ரவைசர் (சிவில்) - 7,
- அலுவலக உதவியாளர் - 9,
- ஜூனியர் ஃபயர் இன்ஸ்பெக்டர் - 4,
- டிரைவர் - 2
முக்கிய நாட்கள்:-
- விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 8 மார்ச் 2020
- விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 7 ஏப்ரல் 2020
வயது வரம்பு:
மேற்கண்ட பணியிடத்திற்கு 7 ஏப்ரல் 2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இளநிலை கண்காணிப்பாளர் - 25, ஜூனியர் ஃபயர் இன்ஸ்பெக்டர் - 30, டிரைவர் - 28 என்ற வகையில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
மேற்கண்ட பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.hslvizag.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.hslvizag.in/WriteReadData/userfiles/file/Recruitment/2020_03_08_Detailed-advt-on-fixed-term-contract.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












