நீங்கள் பி.டெக். படித்தவரா.... எச்சிஎல் உங்களை அழைக்கிறது....!!!

எச்சிஎல் என்று அழைக்கப்படும் ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.hcltech.com/jobs/deputy-manager-1 என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.

எச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்று அழைக்கப்படும் இந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது இந்தியாவை மையமாகக் கொண்டு உலக அளவில் இயங்குகிறது. இதன் தலைமையகம், இந்தியாவில் உள்ள நொய்டாவில் உள்ளது.

ந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகள், தொலைதூர உட்கட்டமைப்பு வசதிகள், பொறியியல் நுட்பங்கள், ஆய்வுசார் சேவைகள், போன்றவற்றை வழங்கி சேவையாற்றி வருகிறது.

நீங்கள் பி.டெக். படித்தவரா.... எச்சிஎல் உங்களை அழைக்கிறது....!!!

இது 31 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. வானூர்தியியல், ராணுவம், மென்பொருள் உருவாக்கம், கொள்கலன் தயாரிப்பு, தொலைத்தொடர்பு சேவைகள், நுகர்வோர்க்கான மின்பொருட்கள், மருத்துவ சேவைகள் என பல துறைகளில் தொழில் செய்கிறது.

ஃபோர்ப்ஸ் நாளேடு உலகளவில் 2000 நிறுவனங்களை பட்டியலிட்டது. அந்த பட்டியலில் எச்சிஎல் நிறுவனமும் இடம்பெற்றது. இது ஆசிய அளவில் ஐம்பது முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெற்றது.

புளூம்பெர்க் பிசினஸ் வீக் என்ற பத்திரிக்கையால் "அதிக தாக்கத்தை கொண்ட முன்னணி நிறுவனங்கள்" என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலிலும் இந்த நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றது.
வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை, நம்பிக்கைக்குரிய 10 நிறுவனங்கள் என்ற பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலிலும் எச்சிஎல் நிறுவனம் இடம்பெற்று சாதனை படைத்தது.

இந்த சிறப்புமிக்க எச்சிஎல் என்று அழைக்கப்படும் ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் நிறுவனத்தில் தான் தற்போது துணை மேலாளர் (Deputy Manager) பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 22 பணியிடங்கள் தற்போது காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை மேலாளர் (Deputy Manager) பணியிடங்களுக்கான கல்வித் தகுதி:

துணை மேலாளர் (Deputy Manager) பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பி.டெக் (B.Tech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் தேவை:

துணை மேலாளர் (Deputy Manager) பணியிடங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் இரண்டரை முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

துணை மேலாளர் (Deputy Manager) பணியிடங்களுக்கான தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

துணை மேலாளர் (Deputy Manager) பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு https://www.hcltech.com/jobs/deputy-manager-1 என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hindustan Computers Limited is offering a great career opportunity for aspirants across the country. HCL Recruitment 2023 is a very good chance for Deputy Managers. All interested candidates can apply for the HCL Careers 2023. For more details please logon into
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+