மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பயிற்சி காலிப் பணியிடத்தினை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொறியியல் துறை பயின்றவர்கள் இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசு
நிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்
மொத்த காலிப் பணியிடம் : 13
பணி : விமான போக்குவரத்து கட்டுப்பாடு பயிற்சி
கல்வித் தகுதி:-
பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, தகவல்தொடர்பு அறிவியல், கணினி சிஸ்டம், மென்பொருள் பொறியியல், மின்சாரவியல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 2018 டிசம்பர் 19ம் தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
(இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு உண்டு)
ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
தேர்வு நடைபெறும் இடம் : பெங்களூர்
உதவித் தொகை : பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.34,690 உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.500
- இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்கும் முறை : www.hal-india.in என்னும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 19
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://hal-india.co.in/Common/Uploads/Resumes/961_CareerPDF1_Advertisement%20ATC%20Trainees%2028112018.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












