நீங்கள் டிப்ளமோ படித்தவரா... பெங்களூர் எச்ஏஎல் அழைக்கிறது...!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் மெடிக்கல் ரெக்கார்ட் டெக்னீஷியன் (Medical Record Technician) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு டிப்ளமோ (Diploma) தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.

டுதல் விவரங்களுக்கு

https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1952_CareerPDF1_MRD TECHNICIAN HAL WEBISTE 2023.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு அறியலாம்.

நீங்கள் டிப்ளமோ படித்தவரா... பெங்களூர் எச்ஏஎல் அழைக்கிறது...!!

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (Hindustan Aeronautics Limited) நிறுவனம் இந்தியாவில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளித்தொழில் துறை நிறுவனங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. விமானங்கள், ஹெலிகாப்டர் போன்றவற்றை தயாரித்து அளித்து வருகிறது. இது இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமையில் செயல்படும் ஒரு அரசு பொதுத்துறை துறை நிறுவனமாகும். இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தினை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நாடு முழுவதும் நாசிக், கோர்வா, கான்பூர், கோராபுட், லக்னோ, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நவ ரத்ன மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும்.
இரண்டாம் உலகப் போர் நடந்துவந்த காலகட்டத்தில், விமானங்களைத் தயாரித்துத் தருவதற்காக அமெரிக்க விமானத் துறை நிபுணர் வில்லியம் டக்ளஸ் பாவ்லே என்பவரின் உதவியுடன் சேட் வால்சந்த் ஹீராசந்த் என்பவர் இந்தியாவில் ஆலையைத் தொடங்க இடம் தேடினார். அவருக்கு மைசூர் மகாராஜா கிருஷ்ண ராஜேந்திர உடையார் தொலைநோக்குப் பார்வையுடன் பெங்களூரில் 700 ஏக்கர் நிலத்தை இலவசமாகவும், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றைச் சலுகை விலையில் தந்து ஆலையை நிறுவ உதவினார். இதையடுத்து 1940 டிசம்பரில் இந்தியாவின் முதல் விமானத் தயாரிப்பு ஆலை தொடங்கப்பட்டது.

இது தனியார் நிறுவனமாக இருந்த காலகட்டத்திலேயே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு 1941இல் இதில் ரூ.25 லட்சத்தை முதலீடு செய்தது. நாடு விடுதலை அடைந்த பிறகு இது பொதுத் துறை நிறுவனமாக்கப்பட்டது.

தற்போது இங்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பாதுகாப்புத் துறைக்கு தேவையான தளவாடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எச்ஏஎல் நிறுவனம்தான் தற்போது விமானப்படையில் இணைந்துள்ள தேஜாஸ் போர் விமானத்தை உருவாக்கியது.

இந்த பெருமைமிகு நிறுவனத்தில்தான் தற்போது மெடிக்கல் ரெக்கார்ட் டெக்னீஷியன் (Medical Record Technician) பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி:

மெடிக்கல் ரெக்கார்ட் டெக்னீஷியன்(Medical Record Technician) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் 10, 12-வது, மெடிக்கல் ரெக்கார்ட் டெக்னாலஜி(SSLC / PUC + Diploma (Medical Record Technology) முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

வயதுத்தகுதி:

இந்த எச்ஏஎல் (HAL) நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01.12.2023 அன்றைய தினத்தின் படி, 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

மெடிக்கல் ரெக்கார்ட் டெக்னீஷியன்(Medical Record Technician) பணிக்கு மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது எச்ஏஎல் (HAL) நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு செய்யும் விதம்:

மெடிக்கல் ரெக்கார்ட் டெக்னீஷியன்(Medical Record Technician) பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் விதம்:

இந்த எச்ஏஎல் (HAL) நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 27.12.2023 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு

https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1952_CareerPDF1_MRD TECHNICIAN HAL WEBISTE 2023.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
HAL-Hindustan Aeronautics Limited Recruitment 2023 inviting the applicant for the following posts Medical Record Technician. Totally 2 vacancies are available for this job. Candidates need to apply offline via Posts for these posts. The work location is Bengaluru, Karnataka. Hindustan Aeronautics Limited Recruitment started from 12-12-2023 to 27-12-2023. Eligible candidates can paid from Rs.20,000 to Rs.35,000 per month.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+