நீங்கள் லேப்-டெக்னீஷியனா... எச்ஏஎல் உங்களை அழைக்கிறது...!!!

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் (HAL) காலியாக உள்ள லேப் டெக்னீஷியன் (Lab Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்து பயன் அடையலாம். கூடுதல் விவரங்களுக்கு https://hal-india.co.in/backend//wp-content/uploads/career/LAB TECHNICIAN HAL WEBSITE 2023_1703833564.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (Hindustan Aeronautics Limited) நிறுவனம் இந்தியாவில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளித்தொழில் துறை நிறுவனங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. விமானங்கள், ஹெலிகாப்டர் போன்றவற்றை தயாரித்து அளித்து வருகிறது.

இது இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமையில் செயல்படும் ஒரு அரசு பொதுத்துறை துறை நிறுவனமாகும். இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தினை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நாடு முழுவதும் நாசிக், கோர்வா, கான்பூர், கோராபுட், லக்னோ, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.

நீங்கள் லேப்-டெக்னீஷியனா... எச்ஏஎல் உங்களை அழைக்கிறது...!!!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நவ ரத்ன மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும். இரண்டாம் உலகப் போர் நடந்துவந்த காலகட்டத்தில், விமானங்களைத் தயாரித்துத் தருவதற்காக அமெரிக்க விமானத் துறை நிபுணர் வில்லியம் டக்ளஸ் பாவ்லே என்பவரின் உதவியுடன் சேட் வால்சந்த் ஹீராசந்த் என்பவர் இந்தியாவில் ஆலையைத் தொடங்க இடம் தேடினார்.

வருக்கு மைசூர் மகாராஜா கிருஷ்ண ராஜேந்திர உடையார் தொலைநோக்குப் பார்வையுடன் பெங்களூரில் 700 ஏக்கர் நிலத்தை இலவசமாகவும், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றைச் சலுகை விலையில் தந்து ஆலையை நிறுவ உதவினார். இதையடுத்து 1940 டிசம்பரில் இந்தியாவின் முதல் விமானத் தயாரிப்பு ஆலை தொடங்கப்பட்டது.

இது தனியார் நிறுவனமாக இருந்த காலகட்டத்திலேயே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு 1941இல் இதில் ரூ.25 லட்சத்தை முதலீடு செய்தது. நாடு விடுதலை அடைந்த பிறகு இது பொதுத் துறை நிறுவனமாக்கப்பட்டது. தற்போது இங்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பாதுகாப்புத் துறைக்கு தேவையான தளவாடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எச்ஏஎல் நிறுவனம்தான் தற்போது விமானப்படையில் இணைந்துள்ள தேஜாஸ் போர் விமானத்தை உருவாக்கியது.

இந்த சிறப்புவாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் தான் (HAL) காலியாக உள்ள லேப் டெக்னீஷியன் (Lab Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியான அறிவிப்பின் படி, லேப் டெக்னீஷியன் (Lab Technician) பணிக்கென ஒரே ஒரு (1) பணியிடம் மட்டுமே எச்ஏஎல் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ளது.

லேப் டெக்னீஷியன் (Lab Technician) பணியிடங்களுக்கு கல்வித்தகுதி:

லேப் டெக்னீஷியன் (Lab Technician) பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் மெடிக்கல் லேப் டெக்னாலஜி (Medical Lab Technology) பாடப்பிரிவில் பி.எஸ்சி (B.Sc Degree) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

லேப் டெக்னீஷியன் (Lab Technician) பணியிடங்களுக்கு வயதுத்தகுதி:

லேப் டெக்னீஷியன் (Lab Technician) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.12.2023 அன்றைய நாளின் படி, 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

லேப் டெக்னீஷியன் (Lab Technician) பணியிடங்களுக்கு மாத சம்பளம்:

லேப் டெக்னீஷியன் (Lab Technician) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் எச்ஏஎல் (HAL) நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு செய்யும் விதம்:

லேப் டெக்னீஷியன் (Lab Technician) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு (Interview )மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் விதம்:

லேப் டெக்னீஷியன் (Lab Technician) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 12.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
இணையதள முகவரி:கூடுதல் விவரங்களுக்கு https://hal-india.co.in/backend//wp-content/uploads/career/LAB TECHNICIAN HAL WEBSITE 2023_1703833564.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hindustan Aeronautics Limited invites applications for the Lab Technician posts via direct recruitment: The Candidate must fill in the application form and send it to Chief Manager (HR), Industrial Health Centre, Hindustan Aeronautics Limited (Bangalore Complex), Suranjandas Road, (Near Old Airport), Bangalore-560 017 along with relevant documents.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+