கிரிட் இந்தியா (Grid India) நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் கிராஜுவேட் டிரேட் அப்ரென்டிஸ் (Electrical Graduate Trade Apprentices) பிரிவில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
கிரிட் இந்தியா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கிரிட் கன்ட்ரோலர் ஆஃப் இந்தியா லிமிடெட் (GRID-INDIA) என்பது இந்திய அரசின் மின்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும். மத்திய அரசு நிறுவனமான இது முன்பு, பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO) என்று அழைக்கப்பட்டு வந்தது. கிரிட் கன்ட்ரோலர் ஆஃப் இந்தியா லிமிடெட் (கிரிட்-இந்தியா) என்று கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் பெயர் மாற்றப்பட்டது.
இந்திய பவர் சிஸ்டத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டைக் கண்காணித்து உறுதி செய்வது இதன் பொறுப்பாகும். இது 5 ரீஜினல் லோட் டெஸ்பாட்ச் சென்டர்கள் (ஆர்எல்டிசி) மற்றும் நேஷனல் லோட் டெஸ்பாட்ச் சென்டர் (என்எல்டிசி) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த பெருமைவாய்ந்த கிரிட் இந்தியா (Grid India) நிறுவனத்தில்தான் எலக்ட்ரிக்கல் கிராஜுவேட் டிரேட் அப்ரென்டிஸ் (Electrical Graduate Trade Apprentices) பிரிவில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக்கல் கிராஜுவேட் டிரேட் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
எலக்ட்ரிக்கல் கிராஜுவேட் டிரேட் அப்ரென்டிஸ் (Electrical Graduate Trade Apprentices) பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் இன்ஜினியரிங் (Engineering) பாடப்பிரிவில் கிராஜுவேட் (Graduate Degree) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
எலக்ட்ரிக்கல் கிராஜுவேட் டிரேட் அப்ரென்டிஸ் (Electrical Graduate Trade Apprentices) பணிக்கு வயதுத்தகுதி:
இந்த கிரிட் இந்தியா (Grid India) நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது குறைந்தது 18 வயது எனவும், அதிகபட்சம் 28 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை:
எலக்ட்ரிக்கல் கிராஜுவேட் டிரேட் அப்ரென்டிஸ் (Electrical Graduate Trade Apprentices) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.15,000/- மாத ஊக்கத்தொகையாக பெறுவர்.
தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மெரிட் லிஸ்ட், டாக்குமெண்ட் வெரிபிகேஷன், நேர்முகத் தேர்வு (Merit List, Document Verification, Interview) ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து online-ல் சமர்ப்பிக்க வேண்டும். 25.01.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












