திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் எம்.ஏ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம் (GRI)
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்
பணி : Guest Faculty
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அவற்றோடு சேர்த்து NET, SLET, PhD இவற்றில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ruraluniv.ac.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 25.08.2021 தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Indira Gandhi Block (near Multi-purpose Auditorium)
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.ruraluniv.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












