கோவா கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களைப் பெற goashipyard.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யலாம்.
இந்த பெருமைவாய்ந்த கோவா கப்பல் கட்டும் தளத்தில்தான் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளன.
தற்போது இங்கு அசிஸ்டென்ட் சூப்பிரன்டென்டன்ட் 4, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 31 (எலக்ட்ரிக்கல் 4, மெக்கானிக்கல் 4, இன்ஸ்ட்ருமென்டேசன் 1, சிவில் 1, ஐ.டி., 1, கப்பல் கட்டுமானம் 20), ஆபிஸ் அசிஸ்டென்ட் 38, பெயின்டர் 20, டிரைவர் 5, ரெக்கார்டு கீப்பர் 3, சமையல் 2 உட்பட மொத்தம் 106 இடங்கள் காலியாக உள்ளன.
கோவா கப்பல் கட்டும் தளத்தின் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ, பெயின்டர் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மற்ற பணிக்கு பதவி வாரியாக கல்வித்தகுதி மாறுபடும். கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரியைக் கிளிக் செய்யுங்கள்.

கோவா கப்பல் கட்டும் தளத்தின் பணியிடங்களுக்கான
வயதுவிவரம்: ஆபிஸ் அசிஸ்டென்ட் 36, டெக்னிக்கல் அசிஸ்டென்ட், பெயின்டர் உட்பட பெரும்பாலான பிரிவுக்கு 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ. 200 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
கடைசிநாள்: விண்ணப்பங்களை அனுப்ப வரும் 27.3.2024-ம் தேதி கடைசி நாளாகும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களைப் பெற goashipyard.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications












