மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC)-வில் காலியாக உள்ள cதவி மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 44 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிடயங்களுக்கு ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி மேலாளர்
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வுளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.32,795 முதல் ரூ.62,315 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.gicofindia.com என்ற இணையதளம் மூலம் 29.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு,குழு விவாதம், நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.gicofindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












