GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!

GRSE Recruitment Notification 2023

'மினி ரத்னா' அந்தஸ்து பெற்ற நிறுவனத்தில், மேலாளர், துணை மேலாளர், இணை மேலாளர், ஜூனியர் மேனேஜர் காலிப் பணியிடங்களுக்கு, தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சி.ஏ., மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

நிர்வாகம் : 'கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட்' (Garden Reach Shipbuilders & Engineers Limited)

மேலாண்மை : மத்திய அரசு

'மினி ரத்னா' அந்தஸ்து பெற்ற நிறுவனத்தில் வேலை...!

பணி விவரம்

v மேலாளர்

v துணை மேலாளர்.

v இணை மேலாளர்

v ஜூனியர் மேனேஜர்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 09.02.2023

ஊதியம்

Ø மேலாளர் - ரூ.60,000- (3 சதவீதம் ஐடிஏ) - ரூ.1,80,000

Ø இணை மேலாலர் - ரூ.50,000 - (3 சதவீதம் ஐடிஏ) - ரூ.1,60,000

Ø உதவி மேலாளர்- ரூ.40,000 - (3 சதவீதம் ஐடிஏ) - 1,40,000

Ø ஜூனியர் மேனேஜர் - ரூ.30,000 - (3 சதவீதம் ஐடிஏ) - ரூ.1,20,000

நோட் இட் ப்ளீஸ்...!

மேலாளர் பதவிக்கு 42 வயதும், துணை மேலாளர் பதவிக்கு 35 வயதும், இணை மேலாளர் பதவிக்கு 28 வயதும், ஜூனியர் மேனேஜர் பதவிக்கு 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வித்தகுதி

மேலாளர் பணிக்கு பட்டய கணக்கர் (Chartered Accountant (CA)/ Cost & Management Accountant (CMA)) படிப்பு முடித்திருக்க வேண்டும். நிதி நிர்வாகத்தில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

இணை மேலாளர் பணிக்கு நான்கு ஆண்டுகள் பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும். 55 சதவீதம் மதிப்பெண் இருப்பது அவசியம்.

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிஸ், எலக்ட்ரிக்கல் ஆகிய பிரிவுகளில் முதுகலை பொறியியல் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

துணை மேலாளர் பணிக்கு மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் படித்திருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் மேனேஜர் பணிக்கு கப்பல் கட்டுதல்,கப்பல் டிசைன், கப்பல் சீர்செய்தல் ஆகிய சம்பந்தப்பட்ட துறைகளில், டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

www.grse.in அல்லது https://jobapply.in/grse2023 என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.

ரொம்ப முக்கியம்....!

விண்ணப்ப படிவத்தை 'ப்ரிண்ட் அவுட்' எடுத்து அஞ்சல் மூலம் புதுடெல்லி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி

Post Box No. 3076,

Lodhi Road,

New Delhi - 110003

மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோட் ப்ளீஸ்...!

https://www.grse.in/current-jobs/index.php

விண்ணப்பப் படிவத்துடன், பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
A notification has been issued that eligible and interested persons can apply for the vacant posts of Manager, Deputy Manager, Associate Manager, Junior Manager in Mini Ratna' Status Company. CA, and engineering graduates have bright prospects.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+