TNPSC Road inspector Recruitment 2023:716 பணிக்கு விண்ணப்பிக்க பிப்.,11 கடைசி நாள்..!

TNPSC Road inspector Recruitment 2023

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை பணிகளில் சாலை ஆய்வாளர் பதவிக்கான 761 காலிப்பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு கைய்ஸ்...! பிப்., 11ஆம் தேதி கடைசி நாளாகும்.

நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (Rural Development and Panchayat Raj Department )

மேலாண்மை : மாநில அரசு

சிவில் டிராட்மென்ஷிப் பணிக்கு ரூ.71 ஆயிரம் ஊதியம்..!

பணி விவரம்

Ø சாலை ஆய்வாளர் (Road Inspector )

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 761

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.02.2023( ஓன்லி டூ டேஸ்)

கல்வி தகுதி

ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையில் சாலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், ஐ.டி.ஐ., சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். Civil Draughtmenship சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

சாலை ஆய்வாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 8 இன் படி, ரூ. 19,500 -ரூ. 71,900 வரை மாத ஊதியம் பெறுவர்.

நோட் இட் ப்ளீஸ்....!

Ø அறிவிப்பு நாள்: 13.01.2023

Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 11.02.2023

தேர்வு முறை

தேர்வு நாள், நேரம், பாடம்:

தாள் -1

1. தொழிற்பயிற்சி(ஐ.டி.ஐ., தரம்) வரைவாளர்(சிவில்)

07.05.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.

தாள் -2

பகுதி - அ

கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு (10ம் வகுப்புத் தரம்)

பகுதி -ஆ

பொது அறிவு (தொழிற்பயிற்சி தரம்), திறனாய்வு தேர்வு(10ஆம்வகுப்பு தரம்)

07.05.2023 பிற்பகல் 02.00 மணி முதல் பிற்பகல் 05:00 மணி வரை நடக்கும். மொத்தம் 450 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

தாள் II-ல் பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின், தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வின் வினா தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. அதாவது தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆவார்.

தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

வயது வரம்பு

சாலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு உச்ச வரம்பு நிர்ணயம் இல்லை. ஏனையோர் 1.07.2023 அன்று 37 வயதினை பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.

தேர்வு கட்டணம்

Ø பதிவுக் கட்டணம் : ரூ.150/-

Ø தேர்வுக் கட்டணம் : ரூ 100/-

மற்ற பிரிவினருக்கு அரசால் வழங்கப்பட்ட கட்டணம் செலுத்துவதில் இருந்து சலுகை உண்டு. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மறக்காதீங்க...!

Ø இணையவழி விண்ணப்பத்தை 11.02.2023 அன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே சமர்ப்பிக்க இயலும், அதன் பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.

Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Ø நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Ø எனவே, நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் இருந்தால் விண்ணப்பிக்கும் போதே பதவிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்வு மையம்

சென்னை, மதுரை , கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் உள்பட 15 நகரங்களில் நடக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

முக்கிய எச்சரிக்கை

Ø தேர்வாணையத்தின்‌ தெரிவுகள்‌ அனைத்தும்‌ விண்ணப்பதாரரின்‌ தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.

Ø பொய்யான வாக்குறுதிகளைச்‌ சொல்லி, தவறான வழியில்‌ வேலை வாங்கித்‌ தருவதாகக்‌ கூறும்‌ இடைத்தரகர்களிடம்‌ விண்ணப்பதாரர்கள்‌ மிகவும்‌ கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்‌.

Ø இது போன்ற தவறான மற்றும்‌ நேர்மையற்றவர்களால்‌ விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும்‌ எவ்வித இழப்புக்கும்‌ தேர்வாணையம்‌ எந்தவிதத்திலும்‌ பொறுப்பாகாது.

Ø இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும்‌ அனைத்துத்‌ தகவல்களுக்கும்‌ விண்ணப்பதாரரே முழுப்‌ பொறுப்பாவார்‌. விண்ணப்பதாரர்‌, தேர்விற்கு இணையவழியில்‌ விண்ணப்பிக்கும்பொழுது, ஏதேனும்‌ தவறு ஏற்படின்‌, தாங்கள்‌ விண்ணப்பித்த இணையச்சேவை மையங்களையோ, பொதுச்‌

Ø சேவை மையங்களையோ குற்றம்‌ சாட்டக்‌ கூடாது. விண்ணப்பதாரர்‌ பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும்‌ முன்னர், நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்‌.

க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

www.tnpscexams.in

https://www.tnpsc.gov.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.tnpsc.gov.in/Document/tamil/02_2023_RI_TAM.pdf

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/english/02_2023_RI_ENG.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Road Inspector Jobs 2023: The Tamil Nadu Public Service Commission, known as TNPSC, has released a notification for the post of Road Inspector in the Rural Development and Panchayat Department under the Tamil Nadu Rural Development Engineering Sub-division. February 11 is the last date for eligible candidates to apply for this post.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+