மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 75 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்கணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (FDDI)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Faculty, Sr. Faculty, Chief Faculty, Manager, Assistant Manager, Creative Designer மற்றும் இதர பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடம் : 75
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ, பட்டம், முதுநிலை டிப்ளமோ, முதுநிலைப் பட்டம், பிஇ, பி.டெக், எல்எல்பி, பிச்டி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 30 முதல் 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.1,50,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.fddiindia.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள முகவரிக்கு 10.04.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.fddiindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












