இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி மற்றும் ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய உணவுக் கழகம் (FCI)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
பணி: Medical Officer மற்றும் Consultant
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 68 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.80,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://fci.gov.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://fci.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












