கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள பெர்டிரைலர்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் திருவிதாங்கூர் என்று அழைக்கப்படும் ஃபேக்ட் நிறுவனத்தில் (FACT) காலியாக உள்ள சீனியர் மேனேஜர், டெபுடி மேனேஜர், அசிஸ்டெண்ட் மேனேஜர், டெக்னீஷியன் பணியிடங்களுக்கு (Senior Manager, Deputy Manager, Assistant Manager, Technician) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://fact.co.in/home/Dynamicpages?MenuId=90 என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
ஃபேக்ட் என்று அழைக்கப்படும் திருவிதாங்கூர், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனம் (Fertilisers and Chemicals Travancore) என்பது இந்தியாவின் கேரளாவின் கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு உர மற்றும் ரசாயன உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் 1943-ம் ஆண்டில் திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தைச் சேர்ந்த மகாராஜா ஸ்ரீ சித்திரைத் திருநாள் பலராம வர்மன் என்பவரால் நிறுவப்பட்டது.
இது சுதந்திர இந்தியாவில் முதல் உர உற்பத்தி நிறுவனமும், கேரள மாநிலத்தில் மிகப்பெரிய மத்திய பொதுத்துறை நிறுவனமும் ஆகும்.
இந்நிறுவனத்திற்கு ஏலூரிலுள்ள உத்யோக மண்டல் பிரிவு (யுசி), மற்றும் அம்பலமேட்டிலுள்ள கொச்சி பிரிவு (சிடி) என 2 உற்பத்தி அலகுகள் உள்ளன. 1947ம் ஆண்டில், கொச்சிக்கு அருகிலுள்ள உத்தியோக மண்டலில் ஆண்டுக்கு 50,000 மெட்ரிக் டன் நிறுவப்பட்ட திறன் கொண்ட அம்மோனியம் சல்பேட் உற்பத்தியை நிறுவனம் தொடங்கியது.

உத்யோகமண்டலில் உள்ள கப்ரோலாக்டம் ஆலை 1990 இல் தொடங்கப்பட்டது. அமோனியா, கந்தக அமிலம், அம்மோனியம் பாஸ்பேட்-சல்பேட் , அம்மோனியம் சல்பேட், துத்தநாக அம்மோனியம் பாஸ்பேட், கப்ரோலாக்டம் மேலும் சிக்கலான உரங்கள் போன்ற முதன்மைப் பொருட்களை தயாரிக்கிறது. ஜிப்சம், நைட்ரிக் அமிலம், சோடியம் கார்பனேட்டு மற்றும் வண்ண அம்மோனியம் சல்பேட் ஆகியவை இதன் துணை தயாரிப்புகளாகும்.
மத்திய உரம் மற்றும் ரசாயனங்கள் துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த ஃபேக்ட் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த பெருமைமிகு ஃபேக்ட் நிறுவனத்தில் தான் (FACT) தற்போது சீனியர் மேனேஜர், டெபுடி மேனேஜர், அசிஸ்டெண்ட் மேனேஜர், டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த ஃபேக்ட் (FACT) நிறுவனத்தில் தற்போது Senior Manager / Deputy Manager பிரிவில் 4 பணியிடங்கள்,
Assistant Manager பிரிவில் 2 பணியிடங்கள், டெக்னீஷியன் (Technician) பிரிவில் 56 பணியிடங்கள் என மொத்தம் 62 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஃபேக்ட் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான கல்வி தகுதி
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பி.எஸ்சி, எம்.எஸ்சி, எல்எல்பி, பட்டமேற்படிப்பு, பிஜி டிப்ளமோ (B.Sc, Bachelors' Degree, M.Sc, LLB, Post Graduate Degree, Post Graduate Diploma) படிப்புகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
ஃபேக்ட் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வயது வரம்பு:
Senior Manager பணிக்கு 45 வயது எனவும், Deputy Manager பணிக்கு 40 வயது எனவும், Assistant Manager பணிக்கு 35 வயது எனவும், Technician பணிக்கு 34 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது வழங்கப்பட்டுள்ளது.
ஃபேக்ட் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான சம்பளம்:
Senior Manager பணிக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை என்றும், Deputy Manager பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை என்றும், Assistant Manager பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும்,
Technician பணிக்கு ரூ.23,350/- முதல் ரூ.1,15,000/- வரை என்றும் மாத சம்பளமாக தரப்படும்.
ஃபேக்ட் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு முறை:
இந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, நேர்முகத் தேர்வு (Computer Based Test மற்றும் Interview) ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஃபேக்ட் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 03.01.2024 அன்று முதல் 23.1.2024 அன்று வரை https://fact.co.in/home/Dynamicpages?MenuId=90 என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://fact.co.in/home/Dynamicpages?MenuId=90 என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












