மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள Specialist Grade பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.78 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

துறையின் பெயர் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (ESIC)
நிர்வாகம் : மத்திய அரசு
பணி : Specialist Grade
மொத்த காலிப் பணியிடங்கள் : 47
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Postgraduate Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 01.11.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.78,800 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, 01.11.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500
- எஸ்.சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், பெண், முன்ள் இராணுவத்தினர் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிடைப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.esic.nic.in அல்லது மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












