மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இ.பி.எப்.ஓ. என்னும் (மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட்) தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 42 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.2.10 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனம் (EPFO)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- Joint Director (IS) - 06
- Deputy Director (IS) - 12
- Assistant Director (IS) - 24
மொத்த காலிப் பணியிடங்கள் : 42
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டம், இளநிலை பொறியியல், இளநிலை தொழில்நுட்பம் போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
ஊதியம் :
- Assistant Director (IS) - ரூ.56,100 முதல் ரூ.1,77,500
- Deputy Director (IS) - ரூ.67,700 முதல் ரூ.2,08,700
- Joint Director (IS) - ரூ.78,800 முதல் ரூ.2,09,200
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.epfindia.gov.in எனும் தளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : அறிவிப்பு வெளியாகி 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.epfindia.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளத்தைக் காணவும்.