இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள Assistant Professor General Management, Faculty உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.18 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தேர்தல் ஆணையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Dean-School of Election Management and Technology, Faculty,/ Assistant Professor General Management, Faculty/ Assistant Professor Election Management உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 06
கல்வித் தகுதி :
- யுஜிசி விதிமுறைக்கு உட்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- உதவிப் பேராசிரியர் பணிக்கு 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- மற்ற பணிகளுக்கு 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.79,800 முதல் அதிகபட்சம் ரூ.2,18,200 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் eci.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
India International Institute of Democracy and Election Management, Plot No. 1, Dwarka Sector 13, Delhi-110078
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : Deputation அடிப்படையல் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் eci.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












