ரூ.2.80 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.80 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

பொது மேலாளர் (Technical) மற்றும் பொது மேலாளர் (HR) என மொத்தம் 07 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடம் : 07

கல்வித் தகுதி :

பொது மேலாளர் - Electrical, Electronics, Tele Communication, Computer Engineering போன்ற பாடங்களில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் எம்பிஏ, டிப்ளமோ மேலாண்மை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொது மேலாளர் (HR) - HR, IR, PM, Social Work போன்ற துறையில் ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பதாரர் 24 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.1,20,000 முதல் ரூ.2,80,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ecil.co.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

ADDITIONAL GENERAL MANAGER & IN-CHARGE, HR
PERSONNEL GROUP, ADMINISTRATIVE OFFICE,
ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED,
ECIL (POST), HYDERABAD - 500 062, TELANGANA

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணம்.
  • எஸ்சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ecil.co.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ECIL Recruitment 2021, Application invited for various General Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X