மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 8-வது தேர்ச்சி முதல் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : கிளார்க், ஓட்டுநர், சௌக்கிதார், செவிலியர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8-வது தேர்ச்சி, MD, MS, DNB, DMLT, B.Sc, டிப்ளமோ, GNM அல்லது அதற்கு இணையான ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://echs.gov.in எனும் தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 12.01.2022 மற்றும் 15.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://echs.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












