மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள Clerk, Driver, Pharmacist, Medical Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 139 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Clerk, Driver, Pharmacist, Radiographer, Medical Officer
மொத்த காலிப் பணியிடங்கள் : 139
வயது வரம்பு :
Driver, Female Attendant, Safaiwala, Chowkidar, Clerk ஆகிய பணிகளுக்கு 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Dental Hygienist, Radiographer, Physiotherapist, Pharmacist, Nursing Assistant, Laboratory Assistant, Laboratory Technician ஆகிய பணிகளுக்கு 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Dental Officer, Office-In-Charge Polyclinic பணிக்கு 63 வயதிற்கு உட்பட்டும், Medical Officer, Medical Specialist பணிக்கு 66 முதல் 68 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Diploma, BDS, B.Sc, MD, MS, DNB, MBBS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.16,800 முதல் ரூ.1,00,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://echs.gov.in எனும் தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 20.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://echs.gov.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.