மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், மருத்துவர், செவிலியர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 61 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி :
ஓட்டுநர், மருத்துவர், செவிலியர், கிளார்க், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட மொத்தம் 61 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி :
Medical Specialist - MD, MS தேர்ச்சி பெற்று மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Medical Officer - எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்று மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Dental Officer - BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lab Technician மற்றும் Assistant - B.Sc (MLT) அல்லது DMLT தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Physiotherapist - Physiotherapy துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Pharmacist - B.Pharm அல்லது D.Pharm தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Dental A/T/H - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று Dental Hygienist துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Nursing Assistant - GNM தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Officer In-Charge - ஓய்வு பெற்ற Defence Officer இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Driver - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று LMV வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
Safaiwala, Female Attendant - தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்தவர்கள், 5 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Clerk - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
DEO - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Chowkidar - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.16,800 முதல் ரூ.1,00,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://echs.gov.in எனும் தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரியில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Stn HQ, ECHS Fort Saint, Chennai-600009
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://echs.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












