இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள Research Associate மற்றும் Junior Research பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.54 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 10
பணி : Research Associate and Junior Research
கல்வித் தகுதி : பி.எச்டி, எம்.எஸ்சி, பி.டெக், எம்.டெக், M.Pharma போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- Research Associate - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- Junior Research - 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.31,000 முதல் அதிகபட்சம் ரூ.54,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவத்தினை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியிலான தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.drdo.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












