இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 57 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ, பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 57
பணி : Apprentice
கல்வித் தகுதி :
Graduate Apprentices - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல், தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Technician Apprentices - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல், தொழில்நுட்ப பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : Apprenticeship விதிக்கப்பட்ட வயது வரம்பிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Graduate Apprentice - ரூ.9,000
- Technician Apprentice - ரூ.8,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் http://www.mhrdnats.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












