இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) பல்வேறு துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெடக் இன்ஜினியரிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ)
மொத்த காலிப் பணியிடங்கள் : 10
பணி : Junior Research Fellow
கல்வித் தகுதி : Mechanical Engineering / EEE / ECE / E&I Engineering / Computer Science & Engineering / Information Technology ஆகிய பாடப்பிரிவுகளில் B.E / B.Tech அல்லது M.E/ M.Tech உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்கு மாதம் ரூ.31,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.drdo.gov.in/home என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், என்.எஸ்.டி.எல்., விஜியன் நகர், விசாகப்பட்டினம் - 530 027
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.01.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://drdo.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












